கோவில் மகிமை

பிரார்த்தனையுடன்.

வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் கைவர பிரார்த்தனை தான் உயர்ந்த வழி. அமைதியும், நிம்மதியும் இல்லாத வாழ்க்கை சூழல்களிலிருந்து மன நிறைவின் சூழலுக்கு வந்து சேருவதற்கான வழிகளில் ஓன்று ஆலய தரிசனம். திருத்தலப் பயணத்தின் சிறப்பு மனத்தை புதுப்பிக்கின்றது. சுத்தம் செய்கிறது.

Praveshana Kavadam

அபூர்வமான சிலைகளைக் கொண்ட கோயில்களில் செல்லும் பொழுது மனதுக்கு அதுவரை கிடைக்காத ஆனந்தம் கிடைப்பது வழக்கமே. இந்நாள்வரை இங்கு வந்துசேர முடியவில்லையே என்ற ஆதங்கம், கும்பிட்டு திரும்பச் செல்லும்போது மறைகிறது. சில காரணங்களையும் வாய்ப்புகளையும் நினைத்து நாமாகவே நிம்மதி அடைகிறோம்.

மலைப்புறம் மாவட்ட்த்தை சேர்ந்த ஆலத்தியூர் பாவீரிக்கரையிலுள்ள நாராயணத்து காவு சுதர்சனக் கோவில் (சக்கரத்தாழ்வார் திருக்கோயில்) அபூர்வமான புனிதத்தலம். சக்கரத்தாழ்வார் சிலை வடிவில் குடிகொண்டுள்ள மிகக் குறைவான கோயில்களில் இதுவும் ஒன்று. சக்கரத்தாழ்வார் இருக்குமிடத்தில் திருமாலும் குடியிருப்பார். சந்தான கோபால கதையில் திருமால் சக்கரத்தாழ்வார் மூலமாக அர்ஜூனனுக்கு வைகுண்ட தரிசனம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த தியான உருவம் தான் இங்கு சிலை வடிவமாக அமைக்க்ப்பட்டுள்ளது. அர்ஜுனன் அன்று அடைந்த பேரின்பப் பேறை இங்கு தரிசனம் செய்பவர்களும் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுதர்சன மந்திரம்
ஓம் நமோ பகவதே மஹாசுதர்சனாய ஹும் பட்
ஜெபிப்பதற்கான மந்திரம்
ஜ்வலந்தம் தேஜஸா நித்யம்
ஸர்வ சத்ரு நிபர்ஹணம்
ஸுதர்சனம் அஹம் வந்தே
தேவ தேவம் ஜகத் பதிம்

ஸ்ரீ நாராயணத்து காவு சுதர்சன கோவிலில் சுதர்சன ஐசுவரிய சக்கரத்தோடு சம்பந்தப்பட்ட நேர்த்திக் கடன்கள் (வேண்டுதல்கள்) விசேஷமாக செய்யப்படுகின்றன. ஐசுவரிய சிததி (செல்வப்பெருக்கு), விஜ்ஞான தீப்தி (அறிவு வளர்ச்சி), சந்தான லெப்தி ( மக்கட்பேறு ) ஆகிய பூஜைகள் முக்கியமாகும். கலிகாலத்தில் பரமபக்தர்களும் கிலேசமின்றி வாழ்வது இயலாத காரியம். .சக்கரத்தாழ்வாரை வழிபட்டும் துதித்தும் நம் பாபங்களிலிருந்து விடுதலை பெற்று திருமாலின் கடாட்சத்தை நாம் பெறலாம். மகாபாரதத்திலும் விஷ்ணு புராணத்திலும் சக்கரத்தாழ்வார் மகிமை பற்றி கூறப் படுகின்றன. சூரியனின் கடுமையான ஒளியை குறைப்பதற்காக விசுவகர்மர் ஒரு இயந்திரத்தால் கடைந்த பொழுது சக்கரத்தாழ்வார் பிறந்தார் என்பது ஐதீகம். தாயத்துக்களில் சுதர்சன சக்கரத்தை வரைவது வழக்கம். இந்த தாயத்து வலிமையையும் கொடுக்கும், தடைகளையும் தீர்க்கும். ஸ்ரீ நாராயணத்து காவு சுதர்சன கோயிலில் சக்கரத்தாழ்வாரின் அருளை தரக்கூடிய சுதர்சன பூஜை, திருவோண பூஜை, சுற்று விளக்கு (கோயில் தீபங்கள் முழுவதும் எரிய வைக்கும் சடங்கு) ஆகிய விசேஷ வழிபாடுகளை செய்தால் செல்வப்பெருக்கு, ஞான ஒளி, புத்திர பாக்கியம், ஆகியவற்றை பெறலாம்.

சுதர்சன ஹோமம் மஹாசுதர்சன ஹோமம் ஆகியவை இந்த கோவிலில் செய்யும்பொழுது விசேஷமான பலன் கிடைக்கிறது. சுதர்சன இயந்திரம் இங்கு பூஜை செய்து அணிவது சத்துரு தோஷம் உட்பட உடலை பாதித்த சகல தோஷங்களுக்கும் பரிஹாரம் ஆகிறது வியாழன் புதன் ஆகிய கிரஹங்களின் தோஷம் உள்ளவர்கள் சுதர்சன இயந்திரம் அணிந்தால் தோஷம் விலகுகிறது.சுதர்சன ஹோமம், மஹாசுதர்சன ஹோமம் ஆகியவை இந்த கோயிலில் வைத்து முறைப்படி . செய்து வைக்கப் படுகிறது. அதோடல்லாமல் அணிவதற்கும் வைத்து பூஜை செய்வதற்கும் வேண்டிய சுதர்சன இயந்திரம் முறைப்படி பூஜை செய்து தருகின்றோம் மற்றும் சுதர்சன பூஜை, திருவோண பூஜை, லக்ஷ்மீ நாராயண பூஜை, சுற்று விளக்கு (கோவிலுக்கு சுற்றும் விளக்கேற்றுதல் ), பகவதி சேவை, நாக பூஜை ஆகியவையும் செய்யப்படுகிறது.

சுபமான தரிசனத்தை கொடுப்பது என்றும், பக்தர்களுக்கு நலத்தை கொடுப்பது என்றும் ‘சுதர்சனம்’ என்ற சொல்லுக்கு பொருள். ஸ்ரீ நாராயணத்து காவு சுதர்சனக் கோயிலில் தரிசனம் செய்து வழிபடுபவர்களுக்கு இது உண்மை என விளங்கும். பிளையாரும், சாஸ்தாவும், துர்கையும், நகராஜாவும் நாக யக்ஷியும் இங்கு அருள் பாலிக்கிறார்கள். இவர்களின் அருளும் உங்களுக்கு கிடைக்க வேண்டும்.

நம்பிக்கையின் அடிப்படை ஒவ்வொருவரின் அனுபவமே. நம்பிக்கைக்கு நாங்கள் ஓர் வழி காட்டுகிறோம். சுதர்சனமூர்த்தியின் தரிசனம்;, ஹோமம், இயந்திர தாரணம் ஆகியவற்றின் நற்பயனை நீங்களும் பெற வேண்டும்.

சுதர்சனமூர்த்தி எளிதில் பிரீதி அடையக் கூடியவர். சரணடைபவர்களிடம் கருணை காட்டுகின்ற அந்த கடவுளின் கிருபை இருந்தால் பெற முடியாதது ஒன்றும் இல்லை

அஹிர் புத்னிய சம்ஹிதை என்ற வைணவ ஆகம நூலில் சுதர்சன உபாசனையில் பலன்கள் பற்றி இவ்வாறு கூறப்படுகின்றன. சுதர்சன உபாஸனையினால் சகல பாபங்களும் மனக் கவலைகளும் வியாதிகளும் இல்லாமல் போய்விடுகிறது. பயிரை நாசம் செய்யும் பிராணிகள் இல்லாமல் போய்விடும்.

எதிரிகள் இருக்க மாட்டார்கள். அரசர் வற்றி பெறுவார். மந்திரிமார்கள் கூறுடன் இருப்பார்கள். நண்பர்கள் நட்புடன் இருப்பார்கள். நெருங்கியவர்கள் சுகத்தை கொடுப்பார்கள். உறவினர்கள் பிரீதியுடன் இருப்பார்கள். நல்லவர்கள் எப்பொழுதும் நன்மை செய்வார்கள். பணம் தர வேண்டியவர்கள் அதை பன்மடங்காக பெருக்கி கொடுப்பார்கள். ஐசுவரியம் என்றும் பெருகுகிறது. சுதர்சன உபாசகரான அரசரின் பிரஜைகளுக்கு என்றும் முன்னேற்றம் உண்டாகிறது. யாவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பர்.

இவ்வாறு சுதர்சன உபாஸனையினால் முடியாதது ஒன்றும் இல்லை.;பல விதமான சுதர்சன சக்கரங்கள் பற்றி அஹிர்புத்னிய சம்ஹிதையில் சொல்லப்படுகின்றது. இந்த வேறுபாடுகளுக்கு காரணம் அவற்றிலுள்ள ஆரக்கால்களின் வேறுபாடே. அவற்றுள் ஐசுவரிய சக்கரம் முக்கியமானது. செழுமை நிறைந்ததும், வைணவ சின்னத்துடன் கூடியதும் பிரதியும்ன சங்கல்பத்தோடு விளங்குவதும், நாலு ஆரங்களுடன் விளங்குவதுமான ஐசுவரிய சக்கரத்தை ஐசுவரியம் (செழிப்பு, வளமை) வேண்டியவர்கள் உபாசிக்கிறார்கள். ஸ்ரீ நாராயணத்து காவு சுதர்சன கோவில் சிலை ஐசுவரிய சக்கரமாகும். செல்வம் தானியங்கள் ஆகியவற்றின் செழிப்பு, கொடிய நோய்கள் இல்லாதிருப்பது, முழுமையான சத்துரு சம்ஹாரம் முதலியவை எல்லாம் ஒன்றாக சேரும் போதுதான் ஐசுவரியம் என்ற வார்த்தை உண்மையாகுகிறது.

வழிபாடு பட்டியல்

ஸ்ரீ நாராயணத்து காவு சுதர்சனக் கோவில்
பதிவு எண் :96/04/2021
பாவேரிக்கரை பீ. ஓ. பொயில்ச்சேரி, மலப்புறம் ஜில்லா, கேரளா- 676102
தொலை பேசி. எண் : 0494 2943566, 9446424566

Privacy Policy © 2024 Sri Narayanathu Kavu Sudarsana Temple, All rights reserved.